ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !                         கவிஞர் இரா .இரவி !


 
நடிப்பில் வென்றனர் 
நடிகர் திலகத்தை
அரசியல்வாதிகள் !

வந்தார் 
நேர்மையான அரசியல்வாதி 
கண்டது கனவு !

பேசினார் பொதுநலம் 
அருகில் 
தேர்தல் !

மனிதனாகச் சாதிக்க 
விலக்கு 
மது !

கேளிக்கை அல்ல 
கேடிகளுக்கானது 
மது !

மகிழ்ச்சி என்று தொடங்கி 
துன்பத்தில் முடியும் 
மது !

வன்முறை வளர்க்கும் 
நட்பை  அழிக்கும் 
மது !

வாரம் ஒரு நாள் தொடக்கம் 
தினமும் என்றாகும் 
மது !

ஓசியில் தொடங்கி
திருட்டில் முடியும் 
மது !
 
வெறும் வாசகமல்ல 
முற்றிலும் உண்மை 
குடி  குடி கெடுக்கும் !

போராடித் தோற்றன 
மரங்கள் 
புயல் !

வளமான 
மனிதாபிமானம் 
ஏழை வீட்டில்  !

உணரவில்லை 
தன் பலம் 
பிச்சையெடுக்கும் யானை !
  
மரம் விட்டு உதிர்ந்த 
கவலையால் 
இலை சருகானது !  

பார்வையாளர் கூடிட
போய் பேசுகின்றன 
தொலைக்காட்சிகள் !
.

கருத்துகள்