கேள்விகள் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் திரு .சா .சதிஷ் குமார்! பதில்கள் கவிஞர் இரா .இரவி !




கேள்விகள் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் திரு .சா .சதிஷ் குமார்!
பதில்கள் கவிஞர் இரா .இரவி !
1.மூடநம்பிக்கைப் பற்றி தங்கள் கருத்து என்ன ?
மூடநம்பிக்கை மனிதனை மிருகமாக்கும் .மனிதனின் சிறப்பியல்பு பகுத்தறிவு
.பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னார் .எதையும் ஏன்? எதற்கு ?
எப்படி ? எதனால் ? என்று பகுத்தறிவு கொண்டு சிந்திக்கத் தொடங்கினால்
மூடநம்பிக்கை முற்றாக ஒழியும்.நாட்டில் ஒழிக்கப்பட வேண்டிய பெரிய நோய்
மூடநம்பிக்கை.
2.காதல் பற்றி தங்கள் கருத்து என்ன ?
காதல் என்பது இயல்பானது .மொட்டு மலர்வது போன்றது. உண்மையான காதலைப்
போற்ற வேண்டும் .அன்று இன்றும் என்றும் இனிமையான ஒன்று காதல் .காதல்
அனுபவம்தான் நான் கவிஞர்கள் காரணம் .ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு
,காதலித்து மணம் முடித்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் .
காதல் திருமணங்கள் சாதியை ஒழிக்க வழி வகுக்கும், பெற்றோர்கள் காதலை
கண்முடித்தனமாக எதிர்க்காமல், உண்மையான ,நல்ல காதலாக இருந்தால் ஏற்று
மணம் முடித்து வைக்க வேண்டும் .காதல் என்ற ஒன்றால்தான் இந்த உலகம் இயங்கி
வருகின்றது .காதல் வாழ்வை இனிமையாக்கியும் வருகின்றது .
3.மணவிலக்கு அதிகரித்துக் கொண்டேயிருப்பதுதான் காரணம். நாகரீகத்தின்
மோகமா ? சகிப்புத் தன்மையின்மையா ?
இரண்டும்தான் .திரைப்படங்கள் பார்த்துவிட்டு அதில் வரும் கதாநாயகி,
கதாநாயகன் போல தன் துணை இருக்க வேண்டும் என்று இருபாலரும்
நினைக்கின்றனர். .திரைப்பட நிழல் .வாழ்க்கை நிஜம் .வாழ்வின் எதார்த்தம்
இணைகள் உணர வேண்டும் .இந்த உலகில் நூற்றுக்கு நூறு பொருத்தம் உள்ள இணை
என்பது இல்லவே இல்லை. இணைகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும் .இதை
நம்மைப் பிரிக்கும் என்று ஆராயாமல் எது நம்மை இணைக்கும் என்பதை நினைத்து,
இணைந்து வாழ விடும் . மண விலக்கு என்பது அன்று இந்த அளவிற்கு இல்லை.
இன்று பெருகிவிட்டது .நாகரீகம் வளர வளர மண விலக்கு எண்ணிக்கையும்
வளர்ந்து விட்டது .
இருவருக்குமே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் மண விலக்கு வர
அவசியம் இருக்காது. உடன்பாடு இல்லாவிட்டாலும் துணையின் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்க வேண்டும் .ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்பாட்டை
உலகிற்குக் கற்றது தந்தவர்கள் நாம் என்ற உணர்வு வேண்டும் .
கோபம் தவிர்த்து பொறுமையாக வாழ்ந்தால் மணவிலக்கு அவசியம் இருக்காது .
4.ஏறினால் இறங்காதது வயதும் விலைவாசி உயர்வும் உண்மைதானே ?
உண்மைதான் .விலைவாசி ஏறினால் இறங்குவதே இல்லை. எடுத்துக்காட்டு பெட்ரோல்
.அரசியல்வாதிகள் தேர்தலின் போது விலைவாசியை இறக்குவோம் என்று வாக்குறுதி
தருகின்றனர் தேர்தல்அறிக்கையிலும் குறிப்பிடுகின்றனர் . ஆனால் வென்றதும்
மறந்து விட்டு விலைவாசியை குறைப்பதே இல்லை .விலைவாசி குறைந்தால்தான்
ஏழைகள் வாழமுடியும் .நம் நாட்டில் ஒரு வேளை உணவு கூட இன்றி பசியால்
வாடுவோர் கோடிக் கணக்கில் உள்ளனர். வறுமை ஒழிக்க வேண்டும் .விலைவாசி
குறைக்க வேண்டும் .
5.மனிதர்களை விட மனிதம் உயர்வானது இதை மனிதன் உணர்வது எப்போது ?
மனிதனைப் பண்படுத்த மனிதனால் படைக்கப்பட்டதுதான் மதம் .ஆனால் இன்று மதம்
மனிதனைப் புண்படுத்தவே பயன்பட்டு வருகின்றது .உலக அளவில் நடக்கும்
பெரும்பாலான வன்முறைகளுக்குக் காரணம் மத வெறியே .மதத்தின் பெயரால்
இழந்த உயிர்கள் பல .
மதம் அபின் என்றார் லெனின் .தந்தை பெரியாரும் மதங்களைச் சாடினார்.
பகுத்தறிவை ஊட்டினார் .கோடிப்பணம் கொட்டிக் கொடுத்தாலும் இழந்த உயிரைத்
திரும்பப் பெற முடியாது . எனவே மதங்களை மறப்போம் மனிதநேயம் காப்போம் .
6.ஊடங்கங்களின் வளர்ச்சி பண்பாட்டின் வளர்ச்சிக்கு சாதகமா ? பாதகமா ?
ஊடங்கங்களின் வளர்ச்சியில் நன்மையும் உள்ளது .தீமையும் உள்ளது.
ஊடங்கங்களில் வரும் செய்திகள் யாவும் எதிர்மறை சிந்தனை விதைக்கும்
விதமாகவே உள்ளன .நல்லது கூறும் ஊடங்கங்கள் மிகக் குறைவு .மக்கள்
மனங்களில் நஞ்சு விதைத்து வருகின்றனர். பண்பாட்டைச் சீரழித்து வருகின்றன
.
7.கல்விக் கொள்ளை தீர்வது ? தீர்வு காண்பது எப்போது ?
கல்வி வள்ளல் காமராசர் காலத்தில் அரசுப்பள்ளிகள் பெருகின .இன்று
அரசுப்பள்ளிகள் குறைந்து வருகின்றன .தமிழ்வழிக் கல்விக்கும் மூடு விழா
நடத்தி வருகின்றனர் .அன்று கல்வி வள்ளல் காமராசர் காலத்தில் பணம் படைத்த
பணக்காரர்கள் சேவை செய்திட கல்வித்துறைக்கு வந்தனர் ஆனால் இன்று கொள்ளை
அடிக்கவே கல்வித்துறைக்கு தனியார் வருகின்றனர் .இதற்கு தீர்வு கல்வித்
துறை முழுவதும் அரசுடைமையாக வேண்டும் .சட்டம் இயற்ற வேண்டும் .கல்வித்
துறையிலிருந்து தனியார்களை அப்புறப்படுத்த வேண்டும் .
8.குடியால் சீரழிவதைக் கண்டுகொள்ளாத அரசின் தன்னலத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள் ?
குடி குடியைக் கெடுக்கும் என்பது குடிமகன் படிப்பதற்கு மட்டுமல்ல அரசும்
படித்து உணரவேண்டும் .குடியால் இன்றைக்கு இளைய சமுதாயம் குறிப்பாக மாணவ
சமுதாயம் சீரழிந்து வருகின்றது .குடும்பத்தலைவன் குடியால் இறக்க விதவைகள்
எண்ணிக்கை நாட்டில் பெருகி வருகின்றது. மது விலக்கு உடனடி தேவை .மது
விலக்கு வேண்டி போராடிய சசி பெருமாள் அய்யாவை இழந்தோம் . மதுரை சட்டக்
கல்லுரி மாணவி நந்தினி தந்தையோடு போராடி பலமுறை சிறை சென்றார் .அரசு
உடனடியாக மது விலக்கு கொண்டு வரவேண்டும் .கொண்டு வராவிட்டால்
சல்லிக்கட்டுக்கு நடத்த போராட்டம் போல மது விலக்கு போராட்டம்
தொடங்கவேண்டி வரலாம் .சமுதாய அக்கறை உள்ள அனைவரும் வலியுறுத்த வேண்டிய
ஒன்று பூரண மது விலக்கு.சில கடைகள் மூடுவதால் எந்த பயனும் இல்லை
.மொத்தமாக மூட வேண்டும்.
9
'வா 'வைவிட
'ஏ ' யே பொருந்தும்
வேலை வாய்ப்பு அலுவலகம் !
ஹைக்கூவின் பொருள் என்ன ?
இன்று தந்தையும் மகனும் வேலை வாய்ப்பு அலுவலக த்தில் புதுப்பிக்க
நிறைக்கும் அவலம் உள்ளது .வேலை கிடைத்தபாடில்லை .55 வயதில் ஒருவருக்கு
நேர்முகத் தேர்விற்கு கடிதம் வருகின்றது .இவரைப் பார்த்து வடித்த ஹைக்கூ
.
வேலை வாய்ப்பு அலுவலகமா ?
வேலை ஏய்ப்பு அலுவலகமா ?
என்று பொருள்பட வடித்தது .
10.ஈழம் மற்றும் மீனவர் பிரச்சனை என்று நீண்டு கொண்டேயிருக்க
இப்பிரச்னைகள் எப்போது தீரும் ?
முன்பு உலக ரவுடி என்று அமெரிக்காவைச் சொல்வார்கள் இன்று உலக ரவுடியாக
இலங்கை உள்ளது .சொந்த நாட்டு மக்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்து
உலகத் தமிழர்களின் உள்ளங்களை ரணமாகியது. தமிழக மீனவர்களையும் குருவி,
காகம் போல சுட்டு்த் தள்ளுகிறது .தட்டிக் கேட்க நாதி இல்லை .சமீபத்தில்
ஒரு மீனவரை இலங்கை கடற்ப்படைச் சுட்டது .வழக்கு பதிவு செய்தார்கள் .இன்று
வரை ஒருவரையும் கைது செய்யவில்லை .உலக அளவில் தமிழன் உயிர் மிக மலிவாகி
விட்டது. வேதனை .
ஈழம் பிரச்சனை தீர ஒரே வழி தனித் தமிழ் ஈழம்.
தமிழக மீனவர் பிரச்சனை தீர ஒரே வழி கச்சத் தீவை இலங்கையிடமிருந்து
இந்தியா திரும்பப் பெற வேண்டும் .

கருத்துகள்