உலக முத்த தினம் ! கவிஞர் இரா .இரவிஉலக முத்த தினம் ! கவிஞர் இரா .இரவி !
கற்காலம் தொடங்கி கணினிக்
காலம் வரை தொடர்வது
முத்தம் !
இதழ்கள் எழுதும்
இனிய கவிதை
முத்தம் !
காதலர்களின்
முதல்படி
முத்தம் !
உதடுகள் வழி
ஊட்டச்சத்து
முத்தம் !
யானைப்பசிக்கு
சோளப்பொரி
முத்தம் !
இதழ்கள் வழி
அமுதம் பரிமாற்றம்
முத்தம் !
உச்சரிக்கும் போதே
உதடுகள் உரசும்
முத்தம் !
தமிழ்த் திரைப்படங்களில்
தடை செய்யப்பட்டது
முத்தம் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !