கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த நாள் விழா !

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த நாள் விழா !

வத்தலக்குண்டில் உள்ள கவிஞர் தோட்டத்தில் நடந்தது .இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச்  சுடர் நிர்மலா மோகன் ஆகியோருடன் மகிழுந்தில் சென்றேன் .இலக்கிய இணையர் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார்கள் . எனது " வெளிச்ச விதைகள் "நூலை பிறந்த நாள் பரிசாக வழங்கி வந்தேன்.விழாவில் சிந்தனையாளர் பேரவை  ஸ்டாலின் குணசேகரன் ,பெரும்புலவர் ராஜ ரத்தினம் ,பேராசிரியர் நம் சீனிவாசன் ,பொறியாளர் சுரேஷ், முனைவர் ஞா.சந்திரன்,  மின்னல் பிரியன் ,திருமதி மின்னல் பிரியன் உள்ளிட்ட  பலரும் வருகை தந்த சிறப்பித்தனர் .வந்த அனைவருக்கும் சைவ அசைவ விருந்து நடந்தது .கவிஞரின் புதல்வர்கள் இருவரும் வரவேற்றனர் .
கருத்துகள்