விடையில்லா விடுகதை ! கவிஞர் இரா .இரவி !

விடையில்லா  விடுகதை  ! கவிஞர் இரா .இரவி !

இந்த வாழ்க்கை எல்லோருக்கும் விடையில்லா  விடுகதை
என்று இறப்போம் என்பது யாருக்கும் தெரியாது !

இருக்கும் வரை நல்லபடி வாழ்வோம் மண்ணில்
இருப்பவன் இல்லாதவன் வேற்றுமை வேண்டாம் !

கோபம் வெறி சூழ்ச்சி சதி ஒழிப்போம்
கண்ணில் இரக்கம் கருணை வளர்ப்போம் !

சாதி மதம் பேதம் பார்க்க வேண்டாம்
சகோதர வாழ்க்கை வாழ்வோம் என்றும் !

நானே பெரியவன் என்ற அகந்தை அழிப்போம்
நானிலத்தில் அனைவரையும் மதிப்போம் !

எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம்
எப்போதும் வராமல் எளிமை காப்போம் !

எவரையும் ஏளனம் செய்யாமல் இருப்போம்
எவர் கூறும் கருத்துக்கு மதிப்பளிப்போம் !

தீங்கு செய்வோரை  யாரும் மதிப்பதில்லை
தீங்கு செய்யாது வாழ்வதே வாழ்க்கையாகும் !

மூச்சு உள்ளவரை இந்த உலகில் உள்ளோருக்கு
முடிந்தவரை நன்மைகள் மட்டுமே செய்வோம் !

இந்த உலகம் யாருக்கும் நிரந்தரமில்லை
என்பதை  மனதில் கொண்டு வாழ்வோம் !

இன்று இருப்பார் நாளை இருப்பதில்லை
என்ற தத்துவத்தை மனதில் கொள்வோம் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்